தேமோர் கரைசல் செய்முறை
உங்கள் தோட்டத்தில் அதிக விளைச்சல் பெற விரும்புகிறீர்களா?
அப்படியென்றால் இந்தத் தேமோர் கரைசல் உங்களுக்கு மிகவும் அவசியம். இரண்டே பொருட்களைக் கொண்டு மிக எளிமையாக நம் வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம். இந்தக் கரைசல் 5 முதல் 7 நாட்களில் தயாராகிவிடும். இதன் பயன்கள் என்னவென்றால் பூக்கள் அதிகம் பூக்கும். பூக்கள் காய்களாக மாற ஊக்கியாகப் பயன்படும். காய்கள் உதிராமல் இருக்க உதவும்.
கரைசல் செய்யத் தேவையான பொருட்கள்:
- புளித்த மோர் – 1 லிட்டர்
- தேங்காய் பால் – 1 லிட்டர்
- மண்பானை- 1
தயாரிக்கும் முறை:
புளித்த மோரை தேங்காய் பாலுடன் கலந்து மண்பானையில் ஊற்றி நிழலான இடத்தில் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
பின்பு இதனை எடுத்துப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
கரைசல் தயாரான பிறகு, ஒரு லிட்டர் தண்ணீரில் 50 முதல் 100 மில்லி தேமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரங்களில் செடிகளுக்குத் தெளித்து வர வேண்டும்.
நன்மைகள்:
- இந்தத் தேமோர் கரைசல் அதிக அமிலத்தன்மை கொண்டது. பயிர்கள் பூ எடுக்கும் சமயத்தில் இதைத் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பிடிக்க உதவுகிறது.
- இந்தத் தேமோர் கரைசல் தெளிக்கப்பட்ட செடியில் இருந்து விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
