Theymor karaisal: clay pot of buttermilk and coconut milk mixture with fresh coconut in a vegetable garden

தேமோர் கரைசல் செய்முறை

உங்கள் தோட்டத்தில் அதிக விளைச்சல் பெற விரும்புகிறீர்களா?

அப்படியென்றால் இந்தத் தேமோர் கரைசல் உங்களுக்கு மிகவும் அவசியம். இரண்டே பொருட்களைக் கொண்டு மிக எளிமையாக நம் வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம். இந்தக் கரைசல் 5 முதல் 7 நாட்களில் தயாராகிவிடும். இதன் பயன்கள் என்னவென்றால் பூக்கள் அதிகம் பூக்கும். பூக்கள் காய்களாக மாற ஊக்கியாகப் பயன்படும். காய்கள் உதிராமல் இருக்க உதவும்.

கரைசல் செய்யத் தேவையான பொருட்கள்:
  1. புளித்த மோர் – 1 லிட்டர்
  2. தேங்காய் பால் – 1 லிட்டர்
  3. மண்பானை- 1
Curd
புளித்த மோர் – 1 லிட்டர்
Coconut-Milk
தேங்காய் பால் – 1 லிட்டர்
மண்பானை- 1
தயாரிக்கும் முறை:

புளித்த மோரை தேங்காய் பாலுடன் கலந்து மண்பானையில் ஊற்றி நிழலான இடத்தில் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்பு இதனை எடுத்துப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

கரைசல் தயாரான பிறகு, ஒரு லிட்டர் தண்ணீரில் 50 முதல் 100 மில்லி தேமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரங்களில் செடிகளுக்குத் தெளித்து வர வேண்டும்.

நன்மைகள்:
  1. இந்தத் தேமோர் கரைசல் அதிக அமிலத்தன்மை கொண்டது. பயிர்கள் பூ எடுக்கும் சமயத்தில் இதைத் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பிடிக்க உதவுகிறது.
  2. இந்தத் தேமோர் கரைசல் தெளிக்கப்பட்ட செடியில் இருந்து விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக  இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *