Ginger, garlic and chillies with a stone grinding bowl and garden sprayer for natural pest repellent

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்முறை

இது ஒரு சிறந்த இயற்கைப் பூச்சி விரட்டி; பூஞ்சைகளை அழிக்கவும் சிறந்தது. இந்த இஞ்சி பூண்டு மிளகாய்க் கரைசலை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. இஞ்சி – 500 கிராம்
  2. பூண்டு – 1 கிலோ
  3. மிளகாய் – 500 கிராம்
  4. மண்ணெண்ணெய் – 200 மில்லி

இஞ்சி பூண்டு மிளகாய்க் கரைசல் தயாரிக்கும் முறை:

பூண்டை எடுத்து மண்ணெண்ணெயில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.  பின்னர் அதனை விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தனித்தனியே அரைத்த விழுதுகள் அனைத்தையும் 6 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த விழுதுகளை நன்கு வடிகட்டிப் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நமக்கு 6 லிட்டர் இஞ்சி பூண்டு மிளகாய்க் கரைசல் தயார்.

குறிப்பு: இக்கரைசல் ஆனது வீரியம் அதிகம் என்பதால் கையுறை அணிந்து தயாரிக்கவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த இஞ்சி பூண்டு மிளகாய்க் கரைசலை, பூச்சி, புழுத் தாக்குதல் அதிகம் உள்ள இடத்தில் 1 லிட்டர், பூச்சித்தாக்குதல் குறைவாக உள்ள இடத்தில் 500 மில்லி என்ற அளவில் 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து வருவதன் மூலம் பூச்சி, புழு மற்றும் பூஞ்சைத் தாக்குதலிலிருந்து பயிர்களைப் பெருமளவு பாதுகாக்கலாம்.

நன்மைகள்: 

இந்த இஞ்சி பூண்டு மிளகாய்க் கரைசல் வீரியம் மிக்கது என்பதால், தொடர்ந்து தெளித்து வரும் செடிகளைப் பூச்சிகள் மீண்டும் தாக்குவது வெகுவாகக் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *