You are currently viewing E.M – (Effective Microorganisms) திற நுண்ணுயிர் தயாரிக்கும் முறையை தெரிந்துகொள்ள வேண்டுமா?

E.M – (Effective Microorganisms) திற நுண்ணுயிர் தயாரிக்கும் முறையை தெரிந்துகொள்ள வேண்டுமா?

         E.M – (Effective Microorganisms) என்னும்  திற நுண்ணுயிர் ஜப்பான் நாட்டில் 1982களில் உருவாக்கபட்டு பயன்படுத்த பட்டது. Ecocert என்னும் நிறுவனத்தால் இது ஒரு இயற்கை இடுபொருள் என சான்றளிக்க பட்டது. இப்பொழுது 120 நாடுகளில் இது விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளில் பயன்படுத்த பட்டு வருகிறது.

E.M வகைகள்: 

  1. E.M 1 திற நுண்ணுயிர்.
  2. E.M 2 திற நுண்ணுயிர்.

E.M 1 திற நுண்ணுயிரி :

        இந்த E.M 1 திற நுண்ணுயிரி ஆனது உறங்கும் நிலையில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இதை நாம் நொதிக்க வைத்து அதன் பிறகே இதனை பயன்படுத்த முடியும். 

E.M 1 தயாரிக்க தேவையான பொருட்கள் :

  1.  1 கிலோ வெல்லம்
  2. 1 கிலோ பரங்கிக்காய் (இனிப்பு பூசணிக்காய்)
  3. 1 கிலோ வாழைப்பழம் (நன்கு கனிந்தது)
  4. 1 கிலோ பப்பாளி பழங்கள்
  5. 1 முட்டை.

தயாரிக்கும் முறை :

மேற்குறிய பரங்கிக்காய் மற்றும் பப்பாளி பழங்களை தோல் நீக்கி விதைகளையும் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். வாழை பழத்தை கூலாக பிசைந்து கொள்ள வேண்டும். முட்டையை உடைத்து இதனுள் சேர்த்து கொள்ள வேண்டும்.

        அனைத்தையும் ஒரு பானையிலோ அல்லது ஒரு பிளாஸ்டிக் கேனிலோ 8 லிட்டர் தண்ணீருடன் கரைத்து  மண்ணிற்குள் புதைத்து வைக்க வேண்டும்.

        பிளாஸ்டிக் கேனில் இருந்தால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதை திறந்து மூட வேண்டும்.

        அப்பொழுதுதான் நொதித்தல் நடக்கும் போது உண்டாகும் மீத்தேன் வாயுக்கள் வெளியேறும்.

        இதை காற்று புகாத வண்ணம் மூடியால் மூடி வைக்க வேண்டும். இந்த E.M 1 கரைசல் 21 நாட்களில் தயார் ஆகிவிடும்.

        இந்த கரைசலுடன் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் கலந்து கொடுக்கலாம். இவ்வாறு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். 

பயன்படுத்தும் அளவு :

         15 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வரை E.M 1 கரைசல் கலந்து பயிர்களுக்கு கொடுக்கலாம்.

        மேலும் இந்த E.M 1 கரைசலை தயாரித்த இரண்டு மாதத்திற்குள் உபயோகப்படுத்தும் பொழுது மட்டுமே அதன் வீரியம் நன்றாக இருக்கும். 

        நாட்கள் செல்ல செல்ல இந்த கரைசலில் வீரியம் குறைய தொடங்கும்.

நன்மைகள் :

        கரைசலை தண்ணீருடன் கலந்து பயிர்களின் வேருக்கே கொடுப்பதால் இதன் முழு பயன்களும் பயிர்களை சென்றடையும்

        இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமிருக்கும்.

        இந்த கரைசலில் அனைத்து வகையான பாக்டீரியாக்களும் அடங்கியுள்ளது.

       இந்த கரைசலை கொடுப்பதால், பயிர்கள் நன்றாக வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெறுகின்றன.

        இதனை தொடர்ந்து கொடுப்பதால் நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

E.M 2 திற நுண்ணுயிரி :

        E.M 2 தயார் செய்ய 1:1:20 என்ற விகிதத்தில், 1 பங்கு E.M 1 திற நுண்ணுயிரி : 1 பங்கு வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை : 20 பங்கு குளோரின் கலக்காத நீர் ஆகியவற்றை 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் வைக்க வேண்டும்.

       இவ்வாறு வைக்கப்படும் கரைசல் நொதிக்க ஆரம்பிக்கும், மீத்தேன் வாயுவை உருவாக்கும். அதை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். இந்த கரைசலே E.M 2 ஆகும். நொதிக்க வைக்க கண்ணாடி கலன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பயன்படுத்தும் அளவு :

        இக்கரைசலை ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். வீட்டின் சமையலறை குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 கரைசலை உபயோகப்படுத்தலாம் இவ்விடங்கள் விரைவாக உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது. துர்வாசனையும் நீங்கும்.

நன்மைகள்: 

        இது மிகச்சிறந்த இயற்கை ஈடு பொருள். கழிவுகளை இதனை கொண்டு மக்கச் செய்து மறுசுழற்சி செய்யலாம்.

         தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும் மறைமுகமாக மற்ற சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.

        மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை தாவரங்களை தாக்காமல் பாதுகாக்கிறது.

Leave a Reply