மீன் அமினோ அமிலமானது எளிதாக கிடைக்கும் மீன், நாட்டுச் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு, இயற்கை முறையில் நாமே தயார் செய்யக்கூடிய ஒரு அமிலமாகும். மீன் அமிலமானது பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.
Urea கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம். நிட்ரிப்பியிங் பாக்டீரியா(Nitrifying bacteria) வானது இந்த மீன் அமோனியா அமிலத்துடன் வினைபுரிந்து அமோனியாவை(amonia) நைட்ரேட்(Nitrate) ஆக மாற்றி பயிர்களுக்கான தழைச்சத்தை தருகிறது.
இந்த மீன் அமினோ அமிலத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- மீன் கழிவுகள் – 1 கிலோ
- பனை வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை – 1 கிலோ
- நன்கு கனிந்த வாழைப்பழம் – 5
தயாரிக்கும் முறை :
ஒரு பிளாஸ்டிக் வாளியில் உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன், சம அளவு நாட்டு சர்க்கரை மற்றும் அதனுடன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலக்கி காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
நாற்பது நாட்கள் கழித்து வாளியில் தேன் போன்ற நிறத்தில் கொஞ்சம் கட்டியாக ஒரு திரவம் இருக்கும். மீன் கழிவுகள் கொஞ்சம் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து பழ வாடை வீசும். இப்படி பழ வாடை வீசினால் மட்டுமே மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கிலோ மீன் கழிவு ஒரு கிலோ நாட்டு சர்க்கரை மற்றும் 5 வாழைப்பழங்கள் கொண்டு 300 இல் இருந்து 400 கிராம் மீன் அமினோ அமிலம் கிடைக்கும்.
பயன்படுத்தும் அளவு :
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
கரும்பு பயிருக்கு 250 மில்லி என்ற அளவில் 15-20 லிட்டர் தண்ணீருடன் கலந்து அடிக்க வேண்டும். கம்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கு 150 மில்லி என்ற அளவில் 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
மண்ணில் இருந்து முளைக்கும் சிறிய பயிர்களுக்கு 100 மில்லி என்ற அளவில் 15 லிட்டர் தண்ணீர் கலந்து கொடுத்தால் போதுமானது ஆகும்
தீவனப்புல் வளர்ப்பவர்கள் மீன் அமிலம் தெளிப்பதன் மூலம் அதிகமான விளைச்சல் பெற முடியும்.
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு, அதன் பின் அந்த பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டும்.
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி?
நன்றி.