You are currently viewing தேமோர் கரைசல்

தேமோர் கரைசல்

உங்கள் தோட்டத்தில் அதிக விளைச்சல் எடுக்க விரும்புகிறீர்களா?

       அப்படி என்றால் இந்த தேமோர் கரைசல் உங்களுக்கு மிகவும் அவசியம். இரண்டே பொருள்களை கொண்டு மிகவும் எளிமையாக நம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். இந்தக் கரைசல் ஆனது 5 நாட்களில் தயாராகிவிடும். இதன் பயன்கள் என்னவென்றால் பூக்கள் அதிகம் பூக்கும். பூக்கள் அனைத்தும் காய்களாக மாற ஊக்கியாக பயன்படும். காய்கள் உதிராமல் இருக்க உதவும்.

கரைசல் செய்ய தேவையான பொருட்கள்.
  1. புளித்த மோர் – 1 லிட்டர்
  2. தேங்காய் பால் – 1 லிட்டர்
  3. மண்பானை- 1
Curd
புளித்த மோர் - 1 லிட்டர்
Coconut-Milk
தேங்காய் பால் - 1 லிட்டர்
மண்பானை- 1
தயாரிக்கும் முறை:

புளித்த மோரை தேங்காய் பாலுடன் கலந்து மண்பானையில் ஊற்றி நிழலான இடத்தில் ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்பு இதனை எடுத்து பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

ஏழு நாட்களுக்குப் பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் 50 லிருந்து 100 மில்லி தேமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரங்களில் செடிகளுக்கு தெளித்து வரவேண்டும்.

நன்மைகள்:
  1. இந்த தேமோர் கரைசல் ஆனது அதிக அமிலத்தன்மை கொண்டது, இது பயிர்கள் பூ எடுக்கும் சமயத்தில் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பிடிக்க உதவுகிறது.
  2. இந்தக் தேமோர் கரைசல் தெளிக்கப்பட்ட செடியில் இருந்து விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக  இருக்கும்.

Leave a Reply