You are currently viewing எளிமையான பூச்சி விரட்டி தயாரிக்க ஆசை படுகிறீர்களா? அப்படி என்றால் இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

எளிமையான பூச்சி விரட்டி தயாரிக்க ஆசை படுகிறீர்களா? அப்படி என்றால் இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

         இது ஒரு சிறந்த பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான்களை அளிக்க சிறந்தது. இந்த இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. இஞ்சி – 500gm
  2. பூண்டு – 1Kg
  3. மிளகாய் – 500gm
  4. மண்ணெண்ணெய் – 200ml.

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிக்கும் முறை:

         பூண்டை எடுத்து மண்ணெண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.  பின்னர் அதனை விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் மிளகாய் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

        தனித்தனியே அரைத்த விழுதுகள் அனைத்தையும் 6 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்கு அந்த விழுதுகளை வடிகட்டி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நமக்கு 6 லிட்டர் இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயார்.

குறிப்பு: இக்கரைசல் ஆனது வீரியம் அதிகம் என்பதால் கையுறை அணிந்து தயாரிக்கவும்

பயன்படுத்தும் முறை:

        இந்த இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலை, பூச்சி புழு தாக்குதல் அதிகம் உள்ள இடத்தில் 1 லிட்டர், பூச்சித்தாக்குதல் குறைவாக உள்ள இடத்தில் 500 மில்லி என்ற அளவில் 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து வருவதன் மூலம் பூச்சி புழு மற்றும் பூஞ்சான் ஆகிய தாக்குதலிலிருந்து முழுமையாக விடுபடலாம். 

நன்மைகள்: 

        இந்த இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் ஆனது வீரியம் அதிகம் என்பதால் பூச்சிகள் மறுபடியும் இந்த செடிகளை தாக்க வாய்ப்பில்லை.

Leave a Reply